Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… உயிருடன் இருக்கும் போதே தன் நினைவு நாளை கொண்டாடிய மாஜி அமைச்சர்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…..!!!!!

ஆந்திர பிரதேச‌ மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் சிராலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மருத்துவரும், முன்னாள் அமைச்சருமான பாலேட்டி ராமராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 12-வது நினைவு தினத்தில் கலந்து கொள்ள வருமாறு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அழைப்பிதழ் வாங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாலேட்டி ராமராவ் வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பாலேட்டி ராமராவ் தான் உயிரோடு இருக்கும் போதே தன்னுடைய நினைவு நாளுக்கு வருமாறு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாலேட்டி ராமராவிடம் கேட்டபோது, நான் 75 வயது வரை உயிருடன் இருக்க ஆசைப்பட்டேன். எனக்கு தற்போது 63 வயது ஆகிவிட்டது. இதனால் எனக்கு 75 வயது வரும் வரை என்னுடைய நினைவு தினத்தை வருடம் வருடம் கொண்டாட முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை. மேலும் உயிருடன் இருக்கும் போதே தன்னுடைய 75-வது பிறந்தநாள் வரை தன் நினைவு  நாளை கொண்டாடுவேன் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் சொன்னது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |