இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை ஆனது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2-ம் தேதி இந்தியாவின் 3-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலம் காந்திநகர் வரை இயக்கப்படுகிறது. இதேபோன்று புதுடெல்லி முதல் வாரணாசி வரையிலும், புதுடெல்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆகிய பகுதிகளிலும் ஏற்கனவே வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. அதன் பிறகு வந்தே பாரத் ரயில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.
இந்த ரயில் பெட்டிகளை சென்னையில் உள்ள ஐசிஎஃப்பில் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்நிலையில் நேற்று மும்பையில் இருந்து காந்தி நகருக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் காலை 11:15 மணி அளவில் பத்வா மற்றும் மணி நகர் பகுதிகளுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது திடீரென ரயில் தண்டவாளத்தில் கூட்டமாக எருமை மாடுகள் வந்துள்ளது. இதனால் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு மெதுவாக சென்ற போதிலும் எருமை மாடுகள் ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் ரயிலின் முன் பகுதி பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் எருமை மாடுகளை ரயிலின் மீது மோதவிட்ட உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை காந்தி நகரில் இருந்து மும்பை நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் குஜராத்தில் உள்ள ஆனந்த் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பசு மாடு ஒன்று ரயிலின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் முன் பகுதி லேசாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்ட சிறிது நாட்களிலேயே பிரதமர் நரேந்திர மோடியின் கனவுசுக்கு நூறாக உடைவதாக இணையதளத்தில் பலரும் கூறி வருகின்றனர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.