இந்தோனேஷியாவில் உள்ள ஜாம்பி மாகாணத்தில் 52 வயது நிரம்பிய ஒரு பெண் ஒருவர் ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்தப் பெண் வேலைக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அந்த பெண்மணியின் உறவினர்கள் அவரை தேடி ரப்பர் தோட்டத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் அங்கு படுத்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்துள்ளனர்.
அப்போது காணாமல் போன அந்த பெண் பாம்பின் வயிற்றுக்குள் இருந்துள்ளார். அந்தப் பெண்மணி ரப்பர் தோட்டத்திற்குள் சென்றபோது அவரை மலை பாம்பு முழுசாக விழுங்கியுள்ளது. பாம்பின் வயிற்றுக்குள் பெண்ணின் சடலம் இருந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
An older woman lost her life to 22foot reticulated phyton snake 🐍 in a rubber garden in Indonesia. After she was declared missing by her husband, only to find her being swallowed by a phyton in the same garden she works. #fulani #lagosians #PeterObi4President2023 #Indonesia pic.twitter.com/C3KF7sAfrN
— Siraj Noorani (@sirajnoorani) October 27, 2022