Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! 9 மாதத்தில் இவ்வளவா….? போதைப்பொருள் விவகாரம் குறித்த அதிர்ச்சி தகவல்….!!!!!

மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நடபாண்டின் 9 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விவரம் மற்றும் கைது நடவடிக்கைகள் போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்தின் 9 மாதங்களில் மட்டும் 11,300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 58 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு பொதுமக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக போராடி வரும் நிலையில் சட்ட விரோதமான செயல்கள் அதிகரித்துள்ளது வேதனைக் குறியது.

கடந்த வருடத்தில் 1780 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 240 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் போதை பொருட்கள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் குறைவுதான் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த போதை பொருள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத், டெல்லி மற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்களில் தான் அதிக அளவில் நடந்துள்ளது. மேலும் கஞ்சா, கோக்கைன், மெடிபிரோன், எல்.எஸ்.எடி வகை போதைப் பொருட்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றின் சந்தை மதிப்பு குறித்த விவரங்களை அறிக்கையில் வெளியிடவில்லை.

Categories

Tech |