மலையாள சினிமாவில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இந்த படத்தில் நடிகை பிரியா வாரியர் கண்ணடிக்கும் சீன் ஒரே நாளில் உலகம் முழுவதும் வைரலான நிலையில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகை பிரியா வாரியர் தற்போது 4 இயர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் நடிகை பிரியா வாரியர் மற்றும் படக்குழுவினர் படத்தை பார்த்துள்ளனர். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த போது நடிகை பிரியா வாரியர் கண்ணீர் விட்டு கதறி கதறி அழுதுள்ளார். அதாவது இது ஆனந்த கண்ணீர் என்று கூறி நடிகை பிரியா வாரியர் அழுதார். அந்த சமயத்தில் படத்தின் நாயகன் பிரியா வாரியரின் கண்ணீரைத் துடைத்து அவரை சமாதானப்படுத்தினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.