விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின் படி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உங்களுடைய பாப்புலாரிட்டி லெவல் பற்றி கூறுங்கள் என்கிறார்.
அப்போது மைனா நந்தினி தனக்கு புறம் பேசும் புத்தி இருக்கிறது என்று கமலிடம் கூறுகிறார். இந்நிலையில் பாப்புலாரெட்டி லெவல் பற்றி கேட்கையில் ஏடிகே தனலட்சுமியின் போட்டோவை ரெட் ஜோனில் வைத்து அவங்க நடந்து கொள்ளும் விதம் மற்றும் பேசும் முறையை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
அதன் பிறகு மணிகண்டன் அமுதவாணனின் புகைப்படத்தை வைத்து அவரை மக்களுக்கு பிடிக்காது என்று கூறுகிறார். இதனையடுத்து மைனா நந்தினி அமுதவாணனின் புகைப்படத்தை ரெட் ஜோனில் வைக்க, குயின்ஸி அசீமின் புகைப்படத்தை வைக்கிறார். இதேபோன்று விக்ரமனும் அசீமின் புகைப்படத்தை ரெட் ஜோனில் வைத்து அவருடைய மீட்டர் குறைந்திருக்கும் என்று நம்புகிறேன் என்கிறார்.
உடனே கமல்ஹாசன் அசீமிடம் இது உண்மையா என்று கேட்கிறார். அதற்கு அசீம் கண்டிப்பாக உண்மை கிடையாது சார். அது அவருடைய தனிப்பட்ட கருத்தாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என்கிறார். இதைக் கேட்டவுடன் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் கைத்தட்டினார்கள். மேலும் இதை பார்த்தவர்கள் அசீமுக்கு வெளியில் நடப்பது கூட தெரிகிறது என்கிறார்கள்.