தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் 2 முறை மழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது லேசான தூறல் மட்டுமே நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே கிருஷ்ணகிரி, தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சென்னையிலும் அதிக அளவில் குளிர் நிலவுகிறது. அதிகாலை 9:00 மணி வரை குளிர் நிலவுவதோடு மாலையிலும் சீக்கிரமாகவே குளிர் தொடங்குவதால் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதோடு முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டதா என்று கேட்க்கும் அளவிற்கு அவ்வளவு குளிர் நிலவுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது ஊட்டியை போன்று சென்னையிலும் குளிர் நிலவுவதாக கூறியுள்ளார். அதோடு நவம்பர் மாதத்தில் புயலோ அல்லது காற்றலுத்த தாழ்வு மண்டலமோ நிலைகொண்டு மழை எதுவும் பெய்யாமல் இருந்தால் இப்படித்தான் குளிர் நிலவும் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் வெதர்மேனின் தற்போதைய பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.