தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவன் முன்னணி நடிகை நயன்தாராவை கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான செய்தியை விக்னேஷ் சிவன் இணையதளத்தில் வெளியிட்ட நேரத்தில் இருந்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அதாவது திருமணம் ஆகி நான்கு மாதத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்ததுதான் ம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகை தாய் முறைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நயன் மற்றும் விக்கி தம்பதி மட்டும் எப்படி வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பவே அவர்கள் மீதான விசாரணை தொடங்கியுள்ளது. அதோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைதாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதால் அவர்களுடைய உறவினர்களும் விளாசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படி விக்கி மற்றும் நயன் தம்பதியை சுற்றி பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது விக்னேஷ் சிவனின் செயல் தற்போது ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.
அதாவது தல அஜித் என்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு ரைடுக்கு கிளம்பிவிட்டார். அவர் புத்தர் சிலை அருகில் நின்று கொண்டு போஸ் கொடுக்கிறார் என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தை= இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் விக்கி. அதோடு அஜித் இருக்கும் வேறு சில புகைப் படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு பிரச்சனைகள் நடக்கும் போது உங்களால் மட்டும் எப்படி விக்னேஷ் சிவன் இப்படி முடிகிறது என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த ரணகளத்திலும் உங்களுக்கு இது தேவையா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அஜித் புகைப்படத்தை வெளியிட்டதற்காக ரசிகர்கள் பலரும் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.