தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடிக்கடி இணையதளத்தில் லீக் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடந்த படப்பிடிப்பை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அதன் பிறகு பைக்கில் இருந்து வில்லனை ஹீரோ கீழே தள்ளிவிடும் காட்சியும் லீக் ஆனது. இதேபோன்று தொழிலாளர்களுடன் ஹீரோ உரையாடும் காட்சியும் லீக் ஆனது. இதனையடுத்து தற்போது வாரிசு படத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
அதாவது ஹீரோ ஸ்டைலாக நடந்து வரும் காட்சியும் சுரங்கத்திற்கு அருகே ஹெலிகாப்டர் நிற்பது போன்ற காட்சியும் லீக் ஆகியுள்ளது. தொடர்ந்து வாரிசு படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி வருவது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிடுவது யார் என்பது குறித்து தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.