Categories
இந்திய சினிமா சினிமா

ஓ!… இதுதான் காரணமா…..? குஷி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு….. உண்மையை சொன்ன விஜய் தேவரகொண்டா…..!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிவா நிர்வாண இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”குஷி”.

இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மகாநடி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஹேசம் அப்துல் வகாப் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு கடந்த மே மாதமே தொடங்கியது.

குஷி ரிலீஸ் தள்ளிப்போகிறது : விஜய் தேவரகொண்டா தகவல் Entertainment பொழுதுபோக்கு

இந்த வருட கிறிஸ்துமஸ் ரிலீசாக இந்த படம் ரிலீசா கும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் இன்னும் மூன்று மாதங்கள் தள்ளிப்போகும் என விஜய் தேவரகொண்டா  சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தள்ளிப்போகும் சூழல் உருவாகி இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த படத்தில் நடித்து வரும் சமந்தா கடந்த சில காலமாக தசை அழற்சி  நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |