தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், சிங்கம், ரோமியோ ஜூலியட், வாலு, மகா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் நடிகை ஹன்சிகா மோத்வானி நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் பிசினஸ் பார்ட்டனருமான சோகேல் என்பவரை கூடிய விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.
ஈபில் டவரின் முன்பாக சோகேல் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் புகைப்படங்களை ஹன்சிகா தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய காதலை உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நெருங்கிய தோழி ரிங்கி என்பவரின் கணவரை தான் இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக ஒரு புதிய தகவல் வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இதற்கெல்லாம் ஹன்சிகா மோத்வானி விளக்கம் கொடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் ஹன்சிகா மோத்வானி தன்னுடைய காதலனுடன் படகில் நிற்கும் ஒரு போட்டோவை வலைதளத்தில் பகிர்ந்து fake அக்கவுண்ட் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னை பற்றி எழும் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களுக்கு எந்த ஒரு விளக்கமும் கொடுக்கததால் ஒருவேளை அந்த தகவல் உண்மையாக இருக்குமோ என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.