தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்து விட்டனர். இந்நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது நாக சைதன்யா, சோபிதாவுடன் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சோபிதா மற்றும் நாகசைதன்யா காதலிப்பது உறுதியாக விட்டது என்று கூறி வருகிறார்கள்.