திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பல நேரங்களில் அவருடன் ( ஸ்டாலின் ) நாங்கள் பயணம் செய்திருக்கிறோம், அவர் பேசும்போது, அங்கு இருக்கின்ற கழகத் தொண்டர்களை பற்றி அதிகம் பேசுவார், அங்கு இருக்கின்ற பொதுமக்களை பற்றி, ஏன் ? நேற்று கூட பார்த்தோம் நாம்.
ஒருவர் சாலையோரம் ஒருவர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தார், அவரை அழைத்து ஆட்டோவில் அழைத்துச் சென்று உட்கார வைத்துக் கொண்டு, அதன் பிறகு தன் வேலையை பார்க்கிறார். அவர் நினைத்திருந்தால் செல்போனை தொடர்பு கொண்டு அவரை மருத்துவமனையில் சேருங்கள் என்று சொல்லியிருக்கலாம், ஆனால் அந்த மனசு இருக்கு பாருங்க. எந்த தலைவருக்கும் இல்லாத மனசு நம்முடைய தலைவருக்கு உண்டு.
அந்த இயக்கத்தில் நாம் எல்லாம் எந்தெந்த பொறுப்பை விட்டு விடுங்கள், அந்த இயக்கத்தில் நாமெல்லாம் ஒரு தொண்டனாக இருப்பதே நமக்கான பெயராக நினைக்கக்கூடிய இயக்கத்தை சார்ந்தவர்கள் தான் இங்கே அமர்ந்திருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் என்பதே நமக்கு பெருமைதான்.ஆக அப்படி தன்னுடைய உழைப்பால், கிட்டதட்ட 55-56 காண்டு கால உழைப்பு, தலைவர் என்று அவரை சும்மா எல்லாம் உட்கார வைக்கலை, 50 வருடம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.