Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!… விந்தணுவை ஊசி மூலம் செலுத்தி கர்ப்பமான 19 வயது இளம்பெண்”…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்….!!!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் ஷானன் நசரோவிச். இவருக்கு தற்போது 23 வயதாகும் நிலையில் டிக் டாக் செயலில் தான் கர்ப்பமாக இருந்த நிகழ்வுகளை அடிக்கடி கூறி வருகிறார். அப்போது ஷானன் தான் எப்படி கர்ப்பமானேன் என்பதை டிக் டாக் செயலியில் கூற அது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஷானன் தனக்கு 19 வயது இருக்கும்போது விந்தணுவை தன்னுடைய உடம்பில் ஊசி மூலம் செலுத்திக்கொண்டு குழந்தை பெற்றதாக கூறியுள்ளார். அதோடு எனக்கு விந்தணுவை நன்கொடையாக வழங்க வேண்டும் என்று ஒருவரை தேடிய நிலையில், 3 மாத காலத்தில் எனக்கு விந்தணு நன்கொடையாளர் கிடைத்தார். அதன் பிறகுதான் நான் ஊசி மூலம் ‌ கர்ப்பமானேன். எனக்கு தற்போது ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் நான் ஊசி மூலம் குழந்தை பெற்றுக் கொண்டேன் என்று சொல்வதை யாரும் நம்புவது கிடையாது. ஆனால் நான் விந்தணுவை ஊசி மூலமாக செலுத்தி குழந்தை பெற்றுக் கொண்டேன் என்பதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் இருக்கிறது. மேலும் நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் தான் விந்தணுவை ஊசி மூலம் செலுத்தி குழந்தை பெற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ‌

Categories

Tech |