அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான ஓ மை கடவுளே படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த அசோக் செல்வன் இப்போது ஆர் ரவீந்திரன் தயாரிப்பில் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் நாசர், சதீஷ், கிரிஷ்குமார், யோகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிய உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அசோக்குமார் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் இப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள இப்படத்திற்கு “ஹாஸ்டல்” என பெயரிடப்பட்டுள்ளது.