Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே! ஆசனவாயில் கொரோனா பரிசோதனை…. துல்லியமாக இருக்குதாம்…. சீனாவில் அறிமுகம்…!!

சீனாவில் கொரோனா பரிசோதனை மாதிரி ஆசனவாயில் இருந்து எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுக்கவும் உயிர்பலிகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு மூக்கு மற்றும் தொண்டையில் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, கொரோனா தொற்று இருக்கிறதா? என்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவில் தற்போது ஆசனவாயில் மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. மற்ற கொரோனா பரிசோதனைகளை விட இது துல்லியமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது அசௌகரியமாக இருப்பதால் மக்களிடையே வரவேற்பு இல்லை. எனவே மிகவும் அவசியமாக இருக்காது என்று தெரிகிறது.

Categories

Tech |