வெறும் 60 ரூபாய்க்காக ஒரு உயிர் பறிபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் விகாஸ். இவர் அங்குள்ள மதுபான பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு ஆம்லெட்டை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த ஆம்லெட்டுக்கு 60 ரூபாய் பில் போட்டுள்ளனர். இதனால் பார் ஊழியர்களிடம் விகாஸ்இது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் பார் ஊழியர்களுக்கும், விகாஸுக்கும் இடையே சண்டை முற்றி அது கைகலப்பாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஊழியர்களால் தாக்கப்பட்டதில் விகாஸ் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெறும் 60 ரூபாய்க்காக ஒரு உயிர் பறிபோன இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.