Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அட கடவுளே… பிள்ளைகளுக்கு ஜாக்கெட்… தனக்கு சேலை… பெண்ணின் விபரீத முடிவு..!!

கடலூர் அருகே பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த ஐயப்பன் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே சமீபகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மதியம் இருவருக்கும் சண்டை அதிகமாகியுள்ளது. இதையடுத்து ஐயப்பனின் தந்தை மகனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சுதா புடவையில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இரு பேரக்குழந்தைகளும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ந்து போனவர் வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை சோதனையிட்டனர். 3 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சுதா தனது குழந்தைகளின் கழுத்தையும் ஜாக்கெட்டால் இறுக்கிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இருப்பினும் கணவர் மாயமாகி இருப்பது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுதாவிடம் தங்க நகை கேட்டு அடிக்கடி ஐயப்பன் சண்டையிட்டு வந்ததாகவும், அண்மையில் 3 பவுன் நகையை மகளிடம் கொடுத்து அனுப்பியதாகவும் சுதாவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கொலையா? தற்கொலையா? என்ற கண்ணோட்டத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |