பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் பாலிவுட் நடிகர் சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜாஹாங்கீர் மற்றும் தைமூர் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை கரீனா கபூர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய 42-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில் நடிகை கரீனா கபூர் மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
அப்போது காரில் இருந்து இறங்கிய கரீனா கபூரை ரசிகர்கள் சுற்றிக்கொண்டு செல்பி எடுத்தனர். இதில் சில ரசிகர்கள் கரீனா கபூரை தள்ளிவிட்டுள்ளனர். அதோடு ஒருவர் கரீனாவின் தோள் மீது கை வைக்கவும் முயற்சி செய்துள்ளார். அதன் பின் கரீனா கபூரின் பாதுகாவலர்கள் வந்து ரசிகர்களை விலக்கி அவரை பாதுகாப்பாக விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.