Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. புதிய பிரச்சனை…. “மாவீரன்” படத்தின் ஷூட்டிங் திடீர் நிறுத்தம்…. ரசிகர்கள் ஷாக்….!!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், 45 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க, இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, யோகி பாபு காமெடி ரோலில் நடிக்கிறார். இதனையடுத்து மாவீரன் திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, பரத் சங்கர் இசை அமைக்கிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மாவீரன் திரைப்படத்தின் சூட்டிங் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக சில பிரச்சனைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் படத்தின் சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தகவலை கேட்ட சிவா ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |