டெல்லியில் யமுனை நதி ஓடுகிறது. இந்த நதியில் வருடம் தோறும் பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பூர்வாஞ்சலிகளால் சத் பூஜை கொண்டாடப்படும். இது அப்பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு பூஜையாக கருதப்படுகிறது. இந்த பூஜை தொடர்பாக டெல்லியில் துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி யமுனை நதியின் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூஜையானது அக்டோபர் 25-ஆம் தேதி தொடங்கப்படும் நிலையில் யமுனை நதிக்கரையில் எங்கு பார்த்தாலும் ஒரே நச்சு நுரை காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வேதிப்பொருட்களை நதியில் தெளிப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.
அதோடு யமுனை நதியில் நுரை தேங்குவதை கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் பூஜை செய்யும்போது நதியில் இறங்கி இடுப்பு வரை மூழ்கி சூரிய பகவானை நோக்கி விளக்குகளை காண்பித்து பூஜை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#WATCH | Delhi: Heavy pollution and toxic foam seen in river Yamuna ahead of #ChhathPuja. Visuals from Kalindi Kunj today. pic.twitter.com/d2BXlTjQQi
— ANI (@ANI) October 27, 2022