பெண் ஒருவருக்கு $1 மில்லியன் பரிசு லாட்டரி விழுந்து அவருடைய குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கனடாவில் வசித்து வருபவர் Ashleigh. இவருக்கு சமீபத்தில் லாட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், லோட்டோ மேக்ஸ் லாட்டரியில் தான் எனக்கு இந்த $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. பரிசு விழுந்த தகவல் எனக்கு தெரிந்த போது வீட்டு சமையலறையில் இருந்து நான் மகிழ்ச்சியில் அதிக சத்தத்துடன் கத்தினேன். அப்போது என் கணவரும், குழந்தைகளும் வீட்டில் வேறொரு அறையில் இருந்தபோது நான் சட்டத்தம் போட்டு கத்துவதை கேட்ட அவர்கள் பயந்து போனார்கள்.
சமையலறையில் இருந்த நான் கத்தியால் வெட்டிக் கொண்டேனோ அல்லது வேறு ஏதாவதா என்று என்னை நோக்கிஓடி வந்தனர். அப்போது லாட்டரி விழுந்த விஷயத்தை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மேலும் என் தாயார் “ஒ மை கடவுளே” என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்” என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் பணத்தை சேமிக்க முடிவு செய்துள்ள அவர் தனது ஆசையான சொகுசு காரை வாங்கவும் திட்டமிட்டுள்ளார்.