Categories
சினிமா தமிழ் சினிமா

அட!.. என்னப்பா சொல்றீங்க….. நடிகை சிவரஞ்சனி நடிகர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்யப் போகிறாரா….? உண்மையை உடைத்த கணவர்….!!!!

தென்னிந்திய சினிமாவில் 90’ஸ் காலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சிவரஞ்சனி. இவர் கடந்த 1991-ஆம் ஆண்டு மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த சிவரஞ்சினி கடந்த 1999-ம் ஆண்டு பிரபல தெலுங்கு  நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிவிட்டார்.

இந்த தம்பதிகளுக்கு தற்போது 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கும் நிலையில், சிவரஞ்சனி மற்றும் ஸ்ரீகாந்த் விவாகரத்து பெற்று பிரிய போவதாக சமீப காலமாகவே செய்திகள் வலைதளத்தில் பரவுகிறது. இந்நிலையில் இந்த தகவல்களுக்கு தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அதாவது இதுபோன்ற தவறான செய்திகளை யாரும் பரப்பாதீர்கள். இந்த செய்தியை காட்டி என்னுடைய மனைவி மிகவும் வருத்தப்படுகிறார் என்று கூறியுள்ளார். மேலும் இந்த தகவலின் மூலம் நடிகை சிவரஞ்சனி மற்றும் ஸ்ரீகாந்த் விவாகரத்து பெற போகிறார்கள் என்ற தகவல் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.

Categories

Tech |