Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… முதல் நாளில் கலெக்ஷன் இவ்வளவுதானா….? “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் வசூல் குறித்து லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில்  நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புயலின் காரணமாகத்தான் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |