தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் தன்னுடைய காதலனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி பக்னாணியுடன் சேர்ந்து இருக்கும்புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரகுல் பகிர்ந்துள்ளார். அதோடு தன்னுடைய காதல் குறித்து ஒரு ஊடகத்திற்கு ரகுல் பேட்டி அளித்துள்ளார்.
அதில் கூறியதாவது, சிலர் தங்களுடைய காதலை வெளிப்படுத்த விரும்ப மாட்டார்கள். ஆனால் நான் அப்படியில்லாமல் என்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளேன். என்னுடைய வாழ்க்கை இரட்டை வழியில் செல்வதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே நான் கேமரா முன்பு நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதனால் நிஜ வாழ்க்கையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக எல்லோருக்குமே வாழ்க்கையில் துணை என்பது மிகவும் முக்கியம். அதே போன்றுதான் நானும் ஜாக்கியும் எங்கள் உறவில் இயல்பாகவும், உறுதியாகவும் இருக்கிறோம்.
இது ஒரு விதமான பாதுகாப்பு உணர்வை ஏற்படுகிறது. எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். வாழ்க்கை என்பது மிகவும் எளிமையானது. அதை பயத்தின் காரணமாக சிலர் மறைத்து சிக்கல் ஆக்கி விடுகின்றனர். மேலும் எனக்கு பயம் இல்லாததால் என்னுடைய காதலை மறைக்க விரும்பாமல் என்னுடைய காதலனை அறிமுகப்படுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார்.