Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… இது டாக்டர் படத்துல வந்த செல்லம்மா ஸ்டெப்தான…. ரஞ்சிதமே பாடலால் விஜய் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்….!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நேரடியாக வெளியாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்கிறார். அதன் பிறகு பிரகாஷ் ராஜ், மீனா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று பட குழு அறிவித்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு அண்மையில் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியானது. இந்த பாடலை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடினாலும் மறுபுறம் இணையதளத்தில் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளுகின்றனர்.

ரஞ்சிதமே பாடல் தமன் இசையில் விஜய் மற்றும் மானசி குரலில் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தான் கலாய்க்கிறார்கள் என்று பார்த்தால் தற்போது பாடலில் விஜய் போட்ட ஒரு நடன ஸ்டெப்பையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளுகிறார்கள். அதாவது சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில்  இடம்பெற்ற செல்லம்மா பாடலில் சிவா ஒரு ஸ்டெப் போட்டு இருப்பார். இதே ஸ்டெப் பை தான் நடிகர் விஜயும் அப்படியே போட்டிருப்பதாக கூறி அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படத்தை விட இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். மேலும் இதை பார்க்கும் விஜய் ரசிகர்களோ  தமன் இப்படி பண்ணிட்டீங்களே என்று கூறி வருகிறார்கள்.

Categories

Tech |