தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தமிழில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் அனுஷ்கா. இந்நிலையில் சமீப காலமாகவே எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகை அனுஷ்காவின் 48-வது படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை பி. மகேஷ்பாபு இயக்க, நிவின் பாலிஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய புதிய படத்தின் போஸ்டரை பிறந்தநாள் வாழ்த்தோடு படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் நீண்ட நாட்களாக விலகி இருந்தாலும் இன்னும் கூட அழகு குறையாமல் அப்படியே அனுஷ்கா இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.