Categories
Tech டெக்னாலஜி

அடடே! “அசத்தலான ஆஃபர்” இனி நாமும் IPHONE வாங்கலாம் போலயே…. தயாராகுங்கள் மக்களே….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக flipkart  நிறுவனம் இருக்கிறது. இந்த பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் பல்வேறு விதமான பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் டிவி, செல்போன்கள் போன்ற டிஜிட்டல் பொருட்களுக்கும் ஏராளமான கண்கவர் ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது ஐபோன்களுக்கு சூப்பரான ஆஃபர் போடப்பட்டுள்ளது.

அதன்படி ஐபோன் 11-ஐ 4 சதவீதம் தள்ளுபடியில், 41,990 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் பழைய போனை எக்சேஞ்ச் செய்து கொண்டால் 16,990 ரூபாய் குறைக்கப்பட்டு, 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதனையடுத்து ஐபோன் 13, 128 ஜிபி செல்போனுக்கு, 2,000 ரூபாய் கேஷ்பேக் கொடுத்தும், பழைய செல்போனை மாற்றும்போது 16,990 ரூபாய் குறைத்தும் மொத்தமாக 48,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Categories

Tech |