Categories
அரசியல் மாநில செய்திகள்

அட! என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு…. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் சொன்ன பதில்…..!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகரின் வீட்டில் காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதன் பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியை எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி வழிநடத்து வந்தது போன்று அம்மா ஜெயலலிதாவும் தொண்டர்கள் இயக்கமாகவே கடந்த 50 வருடங்களாக வழி நடத்தி வந்தார்கள். அதிமுக கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார். இதனையடுத்து செய்தியாளர் ஒருவர் ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறதே என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஓபிஎஸ் ஆளுநரை பற்றி தற்போது பேசுவது சரியான முறையில் இருக்காது என்று மழுப்பலாக பதில் அளித்தார். அதன்பின் செய்தியாளர் ஒருவர் தமிழகத்திற்கு வரவிருக்கும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சொல்கிறேன் என்று கூறினார். மேலும் ஓபிஎஸ் திமுக கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், ஓபிஎஸ் ஆளுநர் பற்றி இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |