செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்க அண்ணன் ஆ. ராசாவ அவங்க தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி இருக்காங்க. அவர் பேசுனது ஆ. ராசாவின் கருத்தா ? யாராவது மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. அது அவர் சொன்னதா ? பல்லாயிரம் ஆண்டுகளாக எங்கள் மேலே இப்படி ஒரு பழியை, சூத்திரன் என வச்சு, இழி மகன், தாசி மகன், வேசி மகன், என்கிற ஒரு பட்டத்தை சுமத்தி வச்சிருக்கியே…. அப்படின்னு அவரு எடுத்துப் பேசுனத, அவரே பேசிட்டாருனு சொல்லுறீங்க.
உங்களுக்கு அடிப்படையில் ஒரு அறிவு இருக்கா ? அவரு பேசல அதை. இப்படி எழுதி வச்சிருக்கியே, பழி சுமத்திரியே அப்படின்னு எடுத்து ஒருத்தன் ஆதங்கத்தில்….. பல ஆண்டு காலமாக இந்த இழிவை சுமந்து வருகின்ற ஒரு மகன் எடுத்து பேசுகிறார். இப்படித்தான் எங்கய்யா வைரமுத்து ஆண்டாளையும் இப்படி எழுதி வச்சிருக்காங்க. இப்படி சொல்லி இருக்காங்கன்னு சொன்னாங்க. உடனே ஆண்டாளை கேவலப்படுத்துறாங்க. டேய் நீங்க நல்ல மனநிலையில் தான் இருக்கீங்களாடா…
அவரு சொல்லலப்பா, இப்படி சொல்லி இருக்குன்னு அவரு எடுத்து சொல்றாரு. அண்ணன் ஆ. ராசா இப்படி எழுதி, பழியை வச்சிருக்க, என்னை தீண்ட தகாதவன் என எழுதி வச்சு இருக்கானு சொல்லுறாரு.இன்னைக்கு வரைக்கும் கடிதம் வாங்கி எழுதுறீங்களா ? அந்த கடிதத்தில் அன் டச்சபிலிட்டி அன் கிரைம் அப்படின்னு எழுதி இருக்கு இல்ல. ஏன் அது எழுதி இருக்கு ? அப்படின்னா அன் டச்சபிலிட்டி அப்படின்னு ஒன்னு இருக்குல்ல. தீண்டாமைனு ஒன்னு இருக்கு தானே, அந்த வலியை சுமந்த ஒரு மகனின் மொழி தான் ஆ ராசாவின் மொழி, அந்த வார்த்தை என சீமான் தெரிவித்தார்.