விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைத் தொட்டிருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு கடந்த வாரம் கோர்ட் டாஸ்க் நடந்தது. இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொள்ளாததால் கமல் அவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார்.
அதோடு போட்டியாளர்கள் சரியான முறையில் விளையாடவில்லை என்றால் இந்த சீசன் தான் மிகவும் போர் ஆன சீசன் என்று பார்வையாளர்கள் கூறி விடுவார்கள் எனவும் கமல் எச்சரித்தார். இதனையடுத்து வழக்கு தொடுக்காத போட்டியாளர்களிடம் கமல் விசாரித்துக் கொண்டிருந்தபோது மைனாவிடமும் விசாரித்தார்.
அப்போது மைனா நந்தினி நான் வழக்கு தொடர்ந்தால் ரச்சிதா மீது தொடர்வேன் என்று கூறினார். அதாவது ரச்சிதா சேஃப் கேம் விளையாடுவதாக மைனா குற்றம் சாட்டினார். உடனே கமல்ஹாசன் அப்படின்னு நீங்க சொல்றீங்களா என்று கேட்டார். உடனே அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் கைத்தட்டி சிரித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.