Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ…! ஆளுநர் நம்மளை பற்றி பேசி இருப்பாரோ… தூக்கத்தை தொலைத்த DMKகூட்டணி கட்சிகள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ரஜினி அவர்கள் பேசியது நாட்டு அரசியல். அதில் எந்தவித தவறும் கிடையாது. அடுத்து என்ன சொல்வார்கள் என்றால்….  பேருந்தில் கூட அரசியல் பேசக்கூடாது . அடுத்த ரூல்ஸ் போடுவார்கள் திமுகவினர். பேசினால் திமுகவை பற்றி ஏதாவது பேசி விடுவார்கள் என்ற பயம்..  பேருந்தில் அரசியல் பேசினால் பஸ்ஸிலிருந்து இறக்கி விடுவார்கள், விமானத்தில் அரசியல் பேசினால் அங்கிருந்து கீழே விட்டுவிடுவார்கள்.

படகில் அரசியல் பேசினால் கடலில் கவிழ்த்து விடுவேன், சாலையில் அரசியல் பேசினால் காவல்துறை இரவு 2மணிக்கு வந்து கைது செய்யும். ஒரு ஜனநாயகத்தில் இரண்டு குடிமகன்கள் அரசியல் பேசுவது இல்லையா ? என்ன பேசுவார்கள் என்று புரியவில்லை. அய்யோ ரஜினி அவர்கள் நம்மளை பற்றி பேசி இருப்பாரா என்று..  உங்களுக்கு ஏன் பயம். நீங்க நல்ல அரசியல் செய்தால் ரஜினி அவர்கள் ஏன் உங்களைப் பற்றி பேச போகிறார்.

இதனால் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு வேலை இல்லை. திமுக கொடுக்கக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிலே சுமந்து கொண்டு, அதை முக்குல வைத்துக்கொண்டு உயிரோடு சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அரசியல் என்றாலே, ஓஹோ  நம்மளைப் பற்றி தவறாக கூறியிருப்பார்கள் என்று, குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும், ஊழல் செய்தவர்களுக்கு குறுகுறுக்கும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். யாரெல்லாம் அரசியலில் தப்பு செய்துள்ளார்களோ,  அவர்கள்தான் முதலில் பேசுகிறார்கள் என தெரிவித்தார்.

ரஜினி அவர்கள் அரசியல் பேசியதில் எந்த தவறும் இல்லை, ரஜினி அவர்கள் ஆளுநரை சந்தித்ததும் எந்த தவறும் இல்லை, ஆளுநர் அவர்கள் சாதாரண மனிதர்களையும் சந்திக்கின்றார். இது எல்லாம் பேசுவதற்கு திமுகவிற்கு எந்த உரிமையும் கிடையாது, சமீபத்தில் தமிழ்நாட்டு தினத்திற்கு ஆளுநர்  அழைத்திருந்தார்கள், அதற்கு திமுகவிலிருந்து யாருமே வரவில்லை, ஆனால் அதற்க்கு நாங்கள் போயிருக்கின்றோம்.

ஆளுநருடைய பிரிவு உபச்சார நிகழ்ச்சிக்கு போயிருந்த போது பழைய ஆளுநரும் சரி, புதிய ஆளுநரும் சரி அற்புதமான மனிதர்களை  வரவழைக்கிறார்கள். சாதாரண மனிதர்கள், மாற்றுத்திறனாளிகள், சாதாரணமான வேலை செய்யக்கூடிய மனிதர்கள், தனித்தன்மை படைத்தவர்கள் எல்லாரையும் ஆளுநர் மாளிகைக்கு வந்து அவரை சந்திக்கும்போது, ரஜினி அவர்களை சந்தித்ததை மட்டும் நம்முடைய கம்யூனிஸ்ட் கட்சிகளோ, வேறு கட்சிகளும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரோ இதை அரசியலாக்க நினைக்கின்றார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |