Categories
தேசிய செய்திகள்

இந்தியப்பெருங்கடலில் எண்ணெய் கசிவு… மொரிசீயசுக்கு 30 டன் பொருட்களை கொடுத்து உதவிய இந்தியா…!!

மொரீசியஸ் நாட்டில் கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக இந்தியா நாட்டிற்கு விமானம் மூலம் உதவியுள்ளது.

வகாஷியோ கப்பல் உடைந்து இந்தியப் பெருங்கடலில் டன் கணக்காக டீசல் மற்றும் எண்ணெய் கசிந்து வருகிறது. இதன் விளைவாக மொரீஷியஸ் தீவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அவசரநிலையை எதிர் கொண்டுள்ளது. டன் கணக்கிலான எண்ணெய் கடலில் கலந்து விட்ட நிலையில், தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வழங்கினார்.

இதற்காக, மொரீஷியசுக்கு இந்திய அரசு  உதவிப்பொருட்களை அனுப்பி இருக்கிறது. இந்தியக் கடலோர காவல் படையில் இருந்து 10 நபர்கள் அடங்கிய குழுவையும், 10,000 எண்ணெய் உறிஞ்சும் பேடுகள் உள்ளிட்ட 30 டன் எடையிலான தொழில்நுட்ப உபகரணங்களையும் இந்திய அரசு அனுப்பியுள்ளது.  மொரீஷியஸ் அரசின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய விமானப் படையின் சி17 க்ளோப்மாஸ்டர் விமானத்தில் இத்தகைய உதவிப் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமான சாகர் திட்டத்தின் அடிப்படையில், மனிதநேய அடிப்படையிலும், அண்டை நாடுகளின் பேரழிவு நிவாரணத்தின் அடிப்படையிலும் இந்த உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த அவசர கால உதவி இந்தியா மற்றும் மொரீசியசுக்கு இடையிலான நட்புறவை உணர்த்துவதாகவும், மொரீஷியஸ் மக்களின் அவசரகால தேவையின்போது இந்தியா உடன் இருக்கும் என அளித்த வாக்குறுதியின்படியும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |