ஆசிரியர் குடும்பத்தை கத்தியால் குத்தி விட்டு நகைகளை பறித்துச் சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொல்லக் கொட்டாய் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், கல்யாணி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் குப்புசாமியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் 3 பேரையும் கத்தியால் குத்திவிட்டு சரோஜா மற்றும் கல்யாணி அணிந்திருந்த 4 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக குப்புசாமி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே திருட்டில் ஈடுபட்ட முருகன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் தனது கூட்டாளியான சுரேஷ் மற்றும் அவரின் மகன் அரவிந்த் குமார், சேட்டு ஆகியோருடன் சேர்ந்து குப்புசாமி என்பவரின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை கத்தியால் குத்தி விட்டு நகைகளை கொள்ளையடித்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனையடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், கத்தி ஆகியவற்றை காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பார்வையிட்டு கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினரை பாராட்டி பரிசு வழங்கியுள்ளார்.