வங்கி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் கேட்டு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டி சமர்ப்பித்த கோரிக்கை சாசனங்கள் மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற கூட்டுறவு வாங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சம்பத் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் ஊழியர்கள் அசோசியேசன் பொதுச்செயலாளர் முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ் உள்பட பல ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிறகு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தின் போது கூட்டுறவு வங்கிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியமாக 1௦,௦௦௦ ரூபாய் வழங்க வேண்டும் எனவும், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அகவிலைபடியுடன் கூடிய மாற்று ஓய்வூதியமும் வழங்குமாறும் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதிய உயர்வு ஆணையில் இருக்கும் குறைபாடுகளை நீக்கி புதிய ஆணை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து அனைத்து கூட்டுறவு வங்கிகளில் துணை ஊழியர் பிரிவு நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், நகர வங்கி மற்றும் இதர கூட்டுறவு வங்கிகளுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும், அனைத்து கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.