மதுரை மாவட்டம் விளாச்சேரி கிராமத்தில் இருக்கும் ஐஸ்வர்யம் அறக்கட்டளை இது. உணவு,உடை, இருப்பிடம் இந்த மூன்றையும் ஏற்படுத்தி தரும் ஆதரவற்றோர் இல்லங்களை தான் நாம் பார்த்திருப்போம் ஆனால் இங்கோ நோய்வாய்ப்பட்தால் கைவிடப்பட்டோர் ஆதரவற்றவர்களை பராமரித்து வருகின்றனர் ஐஸ்வர்யம் அறக்கட்டளைமருத்துவர்களே நடத்தி வருவதால், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் இங்கு இருப்பவர்களுக்கு கிடைக்கிறது. வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த ஐஸ்வரியம் அறக்கட்டளை, சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருவதற்கு காரணம் விளாச்சேரியை சேர்ந்த ஜனார்த்தனன் ஜலஜா தம்பதி, மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லை, விருப்ப ஓய்வு பெற்று கொண்டு ஓய்வுஊதிய பணத்தில் 20 ஆண்டுகளாக ஆதரவற்றோர்களுக்கு தொண்டு செய்து வந்துள்ளனர்.
ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் தொண்டை கேள்விப்பட்டு அவர்களுக்கு நிலத்தை தானமாக கொடுத்ததோடு, மருத்துவ உபகரணங்களையும் இந்த தம்பதியினர் வாங்கி கொடுதுள்ளனர். அறக்கட்டளை ஊழியர்களின் கவனிப்பால் ஜனார்த்தனன் ஜலஜா தம்பதியினரின் பொருளாதார உதவியால் இங்கே இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பெற்ற பிள்ளைகளாலே கைவிடப்பட்டு ஆதரவின்றி சாலையில் கிடந்தவர்கள், அரக்கட்டளை செவிலியர்கள் கனிவான கவனிப்பில் மனநிறைவு கொள்கின்றனர். ஒரு கை தட்டினால் ஓசை தராது என்பார்கள் தொண்டு உள்ளம் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து செய்து வரும் உதவி ஆதரவற்றவர்கள் இன்றி உலகில் யாரும் இல்லை என்று சொல்லாமல் சொல்கின்றனர்.