மீண்டும் திறக்கப்பட சுற்றுலா தலத்தை பா.ம.க. தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலமானது அடைக்கப்பட்டு அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீண்டும் இந்த சுற்றுலா தலம் திறக்கப்பட்டது. இதனை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து அவர் மீன் மார்க்கெட், சமையல் கூடங்கள், பரிசல் துறை உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பரிசல் ஓட்டுபவர்கள், மசாஜ், சமையல் தொழிலாளர்களிடம் பா.ம.க. தலைவர் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் அவர் கூறியதாவது “உலக சுற்றுலா தினத்தையொட்டி இது நீண்ட நாட்களுக்கு பிறகு திறந்தது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இங்கு சமையல் மற்றும் ஈமச்சடங்கு செய்ய தனி இடம் ஒதுக்குமாறு சட்டசபையில் நான் எடுத்துக்கூற இருக்கின்றேன். அதேபோன்று ஒகேனக்கலில் ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு உயிரிழப்பு ஏற்படாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனைதொடர்ந்து இங்கு நீர்வரத்து அதிகமாகும் போது பயணிகள் திரும்பி செல்லாதவாறு செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் குழந்தைகளுக்கான பூங்காக்கள் கொண்டுவரப்படும். ஆகவே முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து சுற்றுலா தலத்தை மேம்படுத்த வழி வகை செய்யப்படும. அதன்பின் வருகின்ற 1-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், மசாஜ் தொழிலாளர்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.