Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மழையின் அளவு குறைந்துள்ளதால்…. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறைவு…. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நீர்வளத்துறை அதிகாரிகள்….!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் கனஅடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது. தற்போது தண்ணீர் வரத்து குறைய தொடங்கிய நிலையில் நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 1 லட்சம் கன அடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்துள்ளது. இந்த நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

ஆனாலும் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், மீட்பு படையினர் ஆகியோர் நாடார் கொட்டாய், சத்திரம், ஊட்டமலை, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் வருவாய் துறையினரும் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |