தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி இன்று தர்மபுரி மாவட்டத்தில் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு பணியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு ஆகிய புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
அதன்பிறகு பொன்னகர் வட்டம் ஒகேனக்கலுக்கு சென்ற போது வழியில் காரை நிறுத்தி திடீரென பள்ளி மாணவிகளை சந்தித்தார்.அப்போது மாணவர்கள் முதலமைச்சரை உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர். இதையடுத்து பள்ளி செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் அளவு மேலும் உயர்த்துவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்படி ரூ.1928 கோடி மதிப்பில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இத் திட்டத்தின்படி காவிரி ஆற்று நீரே நீர் என்று நினைத்துக் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்திற்கு வினியோகம் செய்யப்பட்டு நீர் மாசுபாட்டால் ஏற்படும் புளோரசிஸ் மக்களை காக்கும் திட்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.