தமிழகத்தை பொறுத்தவரை ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் ஓலோ மற்றும் ஊபர் ஆட்டோ, டாக்ஸிகள் தமிழ்நாட்டில் வந்த பிறகு குறைந்தபட்ச கட்டணம் 39 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதோடு பயணிகள் பயணம் செய்யும் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓலோ மற்றும் ஊபர் ஆட்டோ, டாக்ஸிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த சேவையை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் ஓலோ மற்றும் ஊபர் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்த வகையில் தற்போது ஓலோ ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் 110 ரூபாயிலிருந்து 135 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பயணிகளின் வசதிக்காக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 35 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், Peek Hour-ல் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஓலோ நிறுவனத்தின் திடீர் கட்டண உயர்வால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.