ஓலா நிறுவனம் விரைவில் இ ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த இ ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ரூ.499மட்டும் செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 11544wh பேட்டரி பவரை கொண்ட இந்த ஸ்கூட்டரை 18 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்ய முடியும். 50% சார்ஜ் செய்தால் 75% வரை பயணிக்கலாம் என கூறியுள்ளது. இதனை வாங்குவதற்கு மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
இதையடுத்து முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விலை சராசரியாக ஒரு லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் முக்கிய அம்சங்கள்: இருக்கைக்கு அடியில் 2 ஹெல்மெட்கள் வைக்கும் அளவு இடம் , மொபைல் போன் மூலம் ஸ்கூட்டரை லாக் மற்றும் அண்ட் லாக் செய்யும் வசதி, அதிக ரேஞ்ச், 18 நிமிடங்களில் 50% சார்ஜ், இதில் 75 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம். எல்இடி லைட், டிஸ்க் பிரேக், ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.