விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் ஓலம் அடங்கி விடக்கூடாது என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறர்கள்.19 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டாசு விபத்திற்காக பிரதமர் மோடி ராகுல் காந்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பல தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்திற்காக மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சமும் மற்றும் மாநில அரசு 3 லட்சம் உதவியாக வழங்கப்படும் என கூறியுள்ளாது.. பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களின் வாழ்வு என்பது தினமும் செத்து பிழைக்கும் தொழிலாகத்தான் இருக்கும். 19 பேர் உயிரிழந்ததாகவும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாகவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இவ்வாறு பட்டாசு ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் உயிரின் பாதுகாப்பு எப்போது உறுதிசெய்யப்படும் என்றார். இந்த விபத்து குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் பிரச்சார இரைச்சலில் உயிரிழந்தவர்களின் ஓலம் அடங்கி விடக்கூடாது என்றும் அவர் உறுதியாக கூறினார்.