பழைய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவது குறித்து ரிசர்வ்வங்கி வெளியிட்டுள்ள தகவலை பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட போது இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான 100, 500, 1000 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மேலும் அவருக்கு அவற்றுக்கு மாற்றாக புதிய 2000 நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மேலும் பண புழக்கத்தினை அதிகரிப்பதற்காக புதிய வடிவிலான 100, 200, 50, 10 நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த நோட்டுகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
2000 நோட்டுகளும் விரைவில் நீக்கப்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பழைய 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழு மற்றும் மாவட்ட அளவிலான ரூபாய் தாள் மேலாண்மை குழு இணைந்து பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் இதுகுறித்து கூறுகையில், “மார்ச், ஏப்ரல் மாதங்களில் பழைய 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
மேலும் புதிய 100 ரூபாய் நோட்டு தற்போது புழக்கத்தில் அதிகமாக இருப்பதால் பழைய 100 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறும் முடிவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டு 15 வருடங்கள் ஆகியதால் இவற்றைப் பலரும் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பத்து ரூபாய் நோட்டுகள் அதிகாரபூர்வமாக செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்த பிறகும் சிலர் இது குறித்து விழிப்புணர்வு இல்லாமல் வாங்க மறுத்து வருகின்றனர். எனவே இந்த நாணயங்கள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வை வங்கிகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.