ஸ்விட்சர்லாந்தில் வெப்பநிலை தாக்கத்தின் காரணமாக முதியோர் அதிகமாக பாதிப்படைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் வயதானவர்களின் எண்ணிக்கை திடீரென்று உயர்ந்து கொண்டிருப்பதாக பல்கலைக்கழக மருத்துவமனை வருத்தம் தெரிவித்திருக்கிறது. அதிகரித்து வரும் வெப்ப தாக்கத்தால் முதியோர் அதிகம் பாதிப்படைகிறார்கள்.
ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு கொண்ட மக்களின் நிலை மேலும் மோசமடைந்திருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும் வெப்பத்தின் காரணமாக அதிகமாக நீரிழப்பு நோய் தான் நேரடியாக ஏற்பட்டிருக்கிறது. மேலும் வயதானவர்களுக்கு வெப்பத்தின் தாக்கம் காரணமாக பசியின்மை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் குறிப்பிட்ட அளவு உணவையும் அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் வயதானோரில் பலர் மயங்கி கீழே விழுந்தது அல்லது குழப்ப நிலை காரணமாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.