Categories
உலக செய்திகள்

வயசாயிடுச்சுனு, சரியா கவனிக்கல – முதியோர்களை கைவிட்ட நாடுகள் …!!

சில நாடுகளில் முதியோர் இல்லங்களில் மட்டும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர் என்னும் தகவல் வெளியாகியுள்ளது

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவி ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து போன்ற  நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்பலி எண்ணிக்கையை அதிகரித்தது. இந்நிலையில் இந்த நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்று போலவே இருப்பது வருத்தம் கலந்த ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் சுமார் 18 முதல் 20 சதவீதம் வரை முதியவர்கள் போதிய சிகிச்சை இன்றி சரியான கவனிப்பும் இன்றி கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதனை உறுதி செய்வது போல் இங்கிலாந்தில் இருக்கும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் வயதானவர்களின் நிலையும் கொரோனா தாக்குதலுக்கு பின்னர் மிகவும் மோசமானதாகவே உள்ளது.

நாட்டில் சுமார் 2000 முதியோர் இல்லங்கள் உள்ளது அதில் 70 இற்கும் மேற்பட்ட இல்லங்களில் சுமார் 521 முதியோர் முதியவர்கள் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர். பீட்டில்பரோ  என்ற நகரில் இருந்த இல்லத்தில் தங்களது கடைசி காலத்தை கழித்து வந்த 140 முதியவர்களில் 24 பேர் தொற்று ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர்.இங்கிலாந்தில் இருக்கும் முதியோர் இல்லங்களில் மட்டும் 1400 பேர் பலியானதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அதேசமயம் அரசாங்கம் வெளியிடும் பட்டியலில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் பட்டியலில் முதியோர் இல்லங்களில் கொரோனாவால்  இறந்தவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகளையும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர். அதோடு முதியோர் இல்லங்கள் மீதும் பல புகார்கள் கூறப்பட்டு வருகின்றது. இதுகுறித்து ரோனா ஒயிட் என்ற பெண் கூறுகையில் முதியோர் இல்லங்களில் சரியாக யாரையும் கவனிப்பதில்லை.

வயதானவர்கள் தானே செத்தால் சாகட்டும் என்று நினைத்துள்ளனர். 86 வயதான எனது தாயாரும் நிர்வாகிகளின் அலட்சியத்தால் தான் மரணமடைந்தார்.இது ஒரு கிரிமினல் குற்றமாகும் என கண்ணீர் மல்க கூறினார். இதனிடையே கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு  முன்பாகவே முதியவர்கள் பலர் இறந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து முதியோர் இல்லங்களில் பரிசோதனையை மிக தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது

Categories

Tech |