மதுரையில் பராமரிப்பு பணியின் போது பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இடிபாடுகளில் இருந்து சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே உள்ள மேல வடம் போக்கி தெருவில் 50 ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டில் பராமரிப்பு பணியில் 5 பேர் ஈடுபட்டு வந்தனர். மதியம் ஒரு மணி அளவில் திடீரென வீடு இடிந்து விழுந்ததில் இருவர் தப்பி வெளியே ஓடி வந்துவிட்டனர். மற்ற இருவரை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அவர்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து திடீர்நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.