திருவண்ணாமலையில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் கைவிட்டதால் மனமுடைந்து தம்பதி வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அப்பாவு இவருக்கு வயது 90 ,இவரது மனைவி அலமேலு வயது 85 இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண் பிள்ளைகள், மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் உண்டு ஏழு பேரும் தங்களுக்கென்று திருமணம் ஆனதும் தனித்தனிக் குடும்பங்கள் அமைத்துக்கொண்டு பெற்றோரை கவனிக்காமல் சென்று விட்டனர்.
ஏழு பிள்ளைகள் இருந்தும் அனாதையாக கைவிடப்பட்டதால் மனமுடைந்த வயதான தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர் .இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.