Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த மூதாட்டி… தனது மகளுடன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…!!

வயதான தாய் மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடாமேடு பகுதியில் வீரம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு நல்லமுத்து, பழனியம்மாள் என்ற 2 மகள்களும், மணி என்ற மகனும் இருக்கின்றனர். இதில் வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவருக்கு பழனியம்மாளை திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமான 2 ஆண்டிலேயே தனது கணவரை பிரிந்து விட்டு பழனியம்மாள் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இவருடைய மகன் மணி, தனது மனைவி மல்லிகா, மகன் ரமேஷ், மருமகள் சரண்யா போன்றோருடன் மடாமேடு பகுதியில் குடியிருந்து விசைத்தறி கூடம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மணியின் பராமரிப்பில் வீரம்மாள் மற்றும் பழனியம்மாள் வாழ்ந்து வந்ததால் இருவரும் மனம் உடைந்து காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து மணியின் மருமகள் சரண்யா என்பவர் வீரம்மாள் மற்றும் பழனியம்மாள் படுத்திருந்த குடிசை வீட்டிற்கு காப்பி கொடுப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் கதவு சாத்தபட்டிருந்ததால், சரண்யா பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து உடனடியாக தனது மாமனார் மணியிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அதன் பின் அந்த கதவை உடைத்து பார்க்கும்போது வீரம்மாள், பழனியம்மாள் இருவரும் வீடுகளில் மாடுகளை கட்ட பயன்படுத்தும் நைலான் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இவர்களின் உடல் பரிசோதனை முடிந்த பிறகு அவர்களது உறவினர்களிடம் இருவரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |