கனடாவில் ஒரு வயதான பெண்மணி துணிச்சலுடன் கொள்ளையடிக்க வந்த திருடனை மடக்கி பொருட்களை மீட்டுள்ளார்.
கனடாவில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 73 வயதுடைய எலைன் காலவே என்ற பெண்மணி பொருள் வாங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு மர்ம நபர், சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடிவிட்டு சென்றார்.
https://twitter.com/Tr00peRR/status/1488195374116491267
அப்போது எலைன் அந்த நபரை தடுக்க முயற்சித்தார். அப்போது, அந்த நபர், எலைனை தாக்க முயன்றார். ஆனால், எலைன் சுதாரித்துக்கொண்டு, அவரின் முகமூடியைக் கழற்றி, பொருட்களை மீட்டு விட்டார். தற்போது அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுபற்றி, எலைன் கூறுகையில், திருடனை பிடிக்க முயற்சித்தேன். அவன் ஒரு கையில் பொருட்களும், மற்றொரு கையில் சைக்கிளையும் வைத்திருந்தான். அதனால் தான் என்னை தாங்க முடியவில்லை, முகமூடியை கழற்றியவுடன் அங்கிருந்து சைக்கிளில் தப்பி விட்டான் என்று தெரிவித்துள்ளார். இந்த வயதான பெண்மணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.