மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள உளுந்தம்பட்டு கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனபால் இறந்துவிட்டதால் சம்பூர்ணம் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சம்பூர்ணம் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சம்பூர்ணம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பேட்டை காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.